கிரகரி வாவியில் சுற்றுலாப் பயணிகளுடன் விபத்துக்குள்ளான படகு ; இருவர் கைது
நுவரெலியா கிரகரி வாவியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் படகு ஒன்று இன்று (19) விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாவியில் நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் படகு ஒன்று வேகமாக பயணித்துள்ளது.

படகு விபத்து
இந்நிலையில், நீரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அங்கு பயணித்த மற்றுமொரு படகு விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.
நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரதீபராஜா வெளியிட்ட தகவல்
இதன்போது எவருக்கும் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் சிறியளவான காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்த படகுகளை இயக்கிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை நாளை (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.