தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிற்கு விசேட ரயில் சேவைகள்
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களுக்கு விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் அட்டவணையின் கீழ் இயக்கப்படும் சேவைகள் மூலம், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு திரும்புவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும், பெலியத்தையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும் தலா இரண்டு விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காக இரண்டு ரயில் சேவைகளை இயக்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.