நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கை வெளியீடு!
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான தகவல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை , வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (19) கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.