உயர்தர பரீட்சை எழுத போகும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Ministry of Education G.C.E. (O/L) Examination
By Shankar Jan 22, 2023 09:22 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் கடந்த ஆண்டில் (2022) நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (23-01-2023) ஆரம்பமாகி, பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

உயர்தர பரீட்சை எழுத போகும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு | Special Notification Students Higher Level Exams

இவ்வாறான நிலையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

பரீட்சார்த்திகள் இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 196 பரீட்சார்த்திகளும், 53,513 தனியார் பரீட்சார்த்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

உயர்தர பரீட்சை எழுத போகும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு | Special Notification Students Higher Level Exams

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 2200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

விசேட பரீட்சை நிலையங்கள்

கைதிகளுக்காக மெகசின் சிறைச்சாலையில் விசேட பரீட்சை நிலையமும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு மஹரகம வைத்தியசாலையில் விசேட பரீட்சை நிலையமும், விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ரத்மலானை, தங்காலை, கைதடி உள்ளிட்ட பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

பரீட்சையின் போதான பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு வடக்கிலுள்ள தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கு கடற்படை மற்றும் விமானப்படையின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அனர்த்தம்

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னாயத்தங்களுக்காக இவ்வாரம் முதல் நாளாந்தம் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் வானிலை அறிக்கை கோரப்பட்டுள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடமிருந்தும் நிலைவர அறிக்கைககள் கோரப்பட்டுள்ளன.

போக்குவரத்து

பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து சங்கங்கள் மற்றும் புகையிரத திணைக்களம் உள்ளிட்டவற்றுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மின்தடை

பரீட்சை இடம்பெறவுள்ள 22 நாட்களும் மின்சாரத்தை துண்டிக்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. எனவே, பரீட்சார்த்திகள் மின் துண்டிப்பு குறித்து கவலையடையத் தேவையில்லை.

அனுமதி அட்டை

இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் www.onlineexams.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்துக்குள் பிரவேசித்து தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அடையாள அட்டைகள்

பரீட்சை மண்டபத்துக்கு தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியமானதாகும். அடையாள அட்டைக்கு பதிலாக செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதி அட்டை என்பவற்றை கொண்டு செல்லவும் அனுமதியுண்டு. இவ்வாறு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு அட்டையும் இல்லாதவர்கள் பரீட்சை திணைக்களத்துக்கு அது தொடர்பில் அறிவித்து, பரீட்சைக்கு தோற்ற முடியும்.

தவிர்க்க வேண்டியவை

கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டு செல்வதும், தன்வசம் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

பரீட்சை மண்டபத்தில் இவற்றை கொண்டு சென்றமை அல்லது தன்வசம் வைத்திருந்தமை அல்லது உபயோகித்தமை உறுதி செய்யப்பட்டால், குறித்த பரீட்சார்த்திக்கு 5 ஆண்டுகளுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும்.

கணிப்பான்கள்

விடையளிக்கும்போது கறுப்பு அல்லது நீல மை பேனையை மாத்திரமே உபயோகிக்க முடியும். அழி மை (டிபெக்ஸ்) உபயோகிக்கக்கூடாது. மேலும், கணக்கியல் (பாட இலக்கம் 33), பொறியியல் தொழில்நுட்பவியல் பாடங்கள், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களின்போது மாத்திரம் நிரல்படுத்தப்படாத (Non Programmable) கணிப்பான்களை கொண்டு செல்ல முடியும்.

பாட மோதல்கள்

பாட மோதல்களை கொண்ட பரீட்சார்த்திகள் அதாவது ஒரே நாளில் இரு வேறு பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்கள், அது குறித்து முன்னரே பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி அல்லது மேற்பார்வையாளருக்கு அறிவிக்க வேண்டும். இவர்கள் இரு பரீட்சைகளும் நிறைவடையும் வரை வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். உணவு இடைவேளைக்காக அரை மணித்தியாலம் வழங்கப்படும்.

விசேட தொலைபேசி

இலக்கங்கள் பரீட்சை தொடர்பில் வேறு ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், 1911 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது 011-2784208, 011-2784537, 011-2785211 மற்றும் 011-2786616 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாண்டுக்கான அனைத்து பரீட்சைகளையும் நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், உயர்தர பரீட்சையை நடத்துவதில் எவ்வித நிதி நெருக்கடியும் கிடையாது என்றார்.

மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US