தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவித்தல்
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது.
தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாக்களிக்க நேற்று (11) மற்றும் இன்றும் மேலதிக நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாத அரசு அலுவலர்கள் இன்று தபால் வாக்குகளை பயன்படுத்த முடியும் என்பதுடன், அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும்.
எவ்வாறாயினும், இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பித்த எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் தபால் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.