வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களிற்கு விசேட அறிவிப்பு!
பொதுமக்கள் தங்கள் கையில் பணமாக வைத்திருக்ககூடிய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலரிலிருந்து 10,000 டொலராக குறைக்கப்படவுள்ளது.
இத்தகவலை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி மூன்று மாதத்திற்கு மேல் 10,000 டொலர்களை வைத்திருப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களிற்கு காலஅவகாசம் வழங்கப்படும் அதன் பின்னர் அவற்றை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வெளிநாட்டு நாணய சட்டத்தின் கீழ் பறிமுதல் இடம்பெறும் என தெரிவித்த அவர், பொதுமக்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாரும் மத்திய வங்கி அதிகாரிகளும் மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.