சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட விமான சேவை
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 க்கு புறப்பட்ட இந்த விமானம், பேங்கொக் சென்று மாலை 4.20 க்கு மீண்டும் நாடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
அனைத்து பெண்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக, சர்வதேச மகளிர் தினத்தன்று ஸ்ரீலங்கன் விமான சேவை ஒவ்வொரு ஆண்டும் விசேட விமானத்தை இயக்குகிறது.
இம்முறை இந்த விசேட விமான பயணத்தில் 130க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் மதினி விஜேசிங்க தலைமை விமானியாகவும், அயோத்யா ரணசிங்க துணை விமானியாகவும் செயற்பட்டிருந்தனர்.