முக்கிய குற்றச்செயல்கள் மற்றும் மோசடி குறித்து விசேட கலந்துரையாடல்
நாட்டினுள் இடம்பெற்றுள்ள முக்கிய குற்றச்செயல் மற்றும் மோசடி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்னவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் சில விசாரணைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் விசாரணை நிறுத்தப்பட்டதற்கு அரசியல் செல்வாக்கு காரணமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.