அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!
ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பணிக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கான செலவீனம்
போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான செலவீனம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது அரச உத்தியோகத்தர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தினை வழங்குவதற்கு செயலாளர் தலையீடு செய்வதாக உறுதியளித்ததாக குறித்த சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், வாரத்தில் ஐந்து நாட்களும் பணிக்கு சமூகமளிப்பதில் போக்குவரத்துச் செலவுக்காக அதிளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.