புதிய பாடசாலை சீருடை குறித்து விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 பிரிவெனாக்களுக்கு தேவையான காவி உடையும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சீருடைகள் மற்றும் காவி உடைகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சர் மற்றும் சீனத் தூதுவர், சீன அரசாங்கத்தின் விடயத்துற்கு பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் சீன அரசாங்கத்தினால் மானியமாக பாடசாலை சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 100% சீருடைகள் இலவசமாகக் கிடைப்பதுடன், இதனால் அரசுக்கு 7,000 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சீருடைகளின் முதல் தொகுதி நவம்பர் 13ஆம் திகதியும், இரண்டாவது தொகுதி நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.