பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு செய்த சிறப்பு செயல்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் மகிழூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக கடந்த வருடம் பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர்ச்செய்கையின் அறுவடை மற்றும் பதனிடும் முறை தொடர்பாக பயனாளிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
உணவில் நிறம், சுவை, ஆரோக்கியம், அழகு அன அனைத்தையும் கொடுக்கும் அற்புத மருத்துவ குணமுள்ள பொருள் மஞ்சள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஞ்சள் நிறத்துக்காக உணவில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு சித்தர்கள் சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக இதைப் பயன்படுத்தினார்கள். மேலும் மஞ்சள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது.ஒரு பொருள் பல பயன் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மஞ்சள். இதை சிறந்த கிருமிநாசினி என்று சொல்லலாம்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திரசோதி ஜெயதீஸ்வரன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டதோடு விவசாய போதனாசிரியரினால் மஞ்சள் பதனிடும் முறை தொடர்பாகவும் பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இது போன்ற பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


