ஆளும் கட்சி எம் பிக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை!
அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வை ஆரம்பித்து வைத்து, சபாநாயகர் அறிவிப்பை விடுக்கும்போதே சபாநாயகர் இந்த எச்சரிக்கையினை தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நாடாமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, நாடளுமன்றத்தில் இல்லாத மற்றொரு பெண் ஆகியோரை, ஆளுங்கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அதியுயர்சபையில் அவமதிக்கும் வகையில் பேசியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் நான் ஆழமாக ஆராய்ந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அதோடு திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் நான் கவலையடைகிறேன். அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கிறேன் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அதேவேளை இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதி செய்ய ஆளும், எதிர்க்கட்சி பிரதமக் கொறடாகள் இது தொடர்பில் இருதரப்பு எம்.பிகளுக்கும் அறியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் சபநாயக்கர் இதன்போது கடுமையாக எச்சரித்தார்.