தவெக அரசின் ஆயுளை தீர்மானிக்கும் சபாநாயகர் தேர்தல்; தமிழகத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விஜய்யின் வெற்றியால் பல ஆண்டுகால கட்சிகளை புறம்தள்ளி மக்கள் விஜய்க்கு வாக்குகளை குவித்துள்ளனர் .
இந்நிலையில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், தற்போதைய அதிகார போட்டியில் 'சபாநாயகர்' பதவி என்பது வெறும் அலங்கார பதவி அல்ல, அதுவே ஆட்சியின் அச்சாணியாக மாறியுள்ளது.

ஆட்சியின் அச்சாணி
234 தொகுதிகள் கொண்ட அவையில் 118 இடங்கள் என்பது மெஜாரிட்டிக்கான மேஜிக் எண் என்றாலும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக நிற்கிறது.
இந்த சூழலில், புதிய அரசு அமைந்தவுடன் நடைபெறும் சபாநாயகர் தேர்தலே அந்த அரசின் ஸ்திரத்தன்மையை முடிவு செய்யும் முதல் அக்னிப் பரீட்சையாக இருக்கும். சபாநாயகர் தேர்தலிலேயே தவெக-வின் வேட்பாளர் தோற்றுவிட்டால், அது அந்த அரசுக்கு எதிரான ஒரு மறைமுக நம்பிக்கையில்லா தீர்மானமாகவே கருதப்படும்.
பெரும்பான்மை இல்லாத ஒரு சூழலில், சபையை தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும், சிக்கலான நேரங்களில் 'வாக்குச் சமநிலை' ஏற்படும்போது தீர்ப்பு வழங்குவதற்கும் சபாநாயகரின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு மிக அவசியமாகும்.
ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபாநாயகர் தேர்தலில் தவெக-வை தோற்கடித்தால், அடுத்தகட்டமாக ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டு ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கிவிடும் எனவே, விஜய் தனது முதல் அரசியல் நகர்வாக அனுபவம் வாய்ந்த, சட்ட நுணுக்கங்கள் அறிந்த ஒருவரை சபாநாயகர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இது வெறும் பதவிக்கான போட்டி அல்ல, தவெக அரசின் ஆயுளை தீர்மானிக்கும் வாழ்வா சாவா போராட்டம் என இந்திய ஊடகங்கள்குறிப்பிட்டுள்ளன .