பதின்ம வயது சிறுமியை தகாத தொழிலுக்கு ஈடுபடுத்திய ஸ்பா முகாமையாளர் ; நண்பன் செய்த செயல்
பதினாறு வயது சிறுமியை தகாத நடத்தைக்கு ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் ஒரு மசாஜ் நிலைய முகாமையாளரை ராகம பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகக் கூறப்படும் இளைஞனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளக்கமறியல்
மசாஜ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பதினாறு வயது சிறுமி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மசாஜ் நிலைய முகாமையாளர் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இம்மாதம் 20 ஆம் திதகி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு கொழும்பில் உள்ள ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ராகம பொலிஸ் குழு, ராகம பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு, சிறுமியை மீட்டு, அதன் முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
மசாஜ் நிலையத்தின் உரிமையாளரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது நண்பர் என்று கூறப்படும் ஒரு இளைஞனை இந்த மசாஜ் மையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்ததாக சிறுமியிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகக் கூறப்படும் இளைஞனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.