அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேருக்கு நேர்ந்த நிலை!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (09-02-2024) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அதிவேக நெடுஞ்சாலையில் சூரியவெவ அந்தரவெவ சந்திப்புக்கு அருகில் அதிவேக வீதியை நோக்கிச் சென்ற வேன் லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்லது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் 4 பேரும், சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 8 வயது ரஷ்ய சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியில் பயணித்த கணவன், மனைவி, அவர்களின் 2 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் குழு அஹுங்கல்லையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        