இலங்கையை உலுக்கிய ஐவர் படுகொலை: சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்!
தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள் மூவரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களின் பின்வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கூடிய விரைவில் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல் தரக்கூடிய தொலைபேசி இலக்கங்கள்
தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - 071 8591488 நிலைய பொறுப்பதிகாரி / பெலியத்த - 0718591497 ஆகிய எண்ணிற்கு தெரிவிக்கவும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களின் விபரங்கள்,
01. பெயர் - மஹகமகே தினேஷ் பிரியங்கர அல்லது 'சூட்டியா' அல்லது மஹகமகே தினேஷ் பிரதீப் ஜயசேகர முகவரி - டென்மார்க் காலனி, வேரகொட, கஹவ, அம்பலாங்கொடை அடையாள அட்டை இலக்கம் - 892362890V
02. பெயர் - நாணாயக்கார அகரகே நிஷாந்த சமன் குமார் டயஸ் முகவரி - இலக்கம் 80, யாய 4, தம்புத்தேகம. இல 84, கல்பாத, அங்குருவெல்ல. அடையாள அட்டை இலக்கம் - 740744330V
03. பெயர் - ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா முகவரி - இல. 107/2/ B, புவக்கஹவத்த, மாகந்தன, ஊரகஹா. அடையாள அட்டை இலக்கம் - 832190942V