நல்லூர் கந்தன் ஆலயத்தில் தென்னிந்திய பாடகர் மனோ
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு தென்னிந்திய பிரபல பாடகர் மனோ சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
நேற்றையதினம் பலாலி விமான நிலையம் ஊடாக வந்திறங்கிய பாடகருக்கு பலத்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.
நல்லூர் கந்தப்பெருமானை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாடகர் மனோ, சரியான நேரத்தில் வந்து முருகனின் அருளைப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா தற்போது இடம்பெற்று வரும் நிலையில் புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் இருந்தும் நல்லூரானை டரிசிக்க பக்டர்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழ பாடல்களை பாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்
அதேவேளை ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி எமது இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மக்களையும் , நல்லூர் திருவிழாவிற்காக வந்துள்ள புலம்பெயர்கள் தமிழர்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்வை நடத்தவுள்ளோம் தெரிவித்தார்