கிழக்கில் குற்றவாளிகளின் கூட்டணி ; தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம்
அண்மையில் கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய குற்றவாளிகள் இணைந்து கனவான் ஒப்பந்தம் மற்றும் கிழக்கு தமிழர்களின் கூட்டணி என்று உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள நயவஞ்சக திட்டமொன்றை மேற்கொண்டு இருந்த வேளையில் அவர்களின் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தொடர்ச்சியாக செய்த பாவங்களுக்கு உரிய கர்மவினை தண்டனையை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட மனித உரிமைகளுக்கு முரணான பல கொடூரமான செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியாக கருணாவை அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளது குற்றவாளிக் கூட்டணியின் இறுதி நம்பிக்கையையும் தகர்த்து கனவான் ஒப்பந்தம் என்று கயவர்கள் கூறிக்கொண்ட கூட்டணிக்கு சாவு மணி அடித்துள்ளது.
கடந்த காலத்தில் கருணா- பிள்ளையான் கூட்டணியே பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டது உட்பட பல குற்ற செயல்களுக்கு பின்னணியில் இருந்ததாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த கொலைக்கார கும்பலுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் நன்னாளை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.