விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேரில் பவனி வந்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்
ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்று பெருமளவான பக்தர்களின் விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.

அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.