தந்தைக்கு வாழ்த்துக்கூறிய இளைய தளபதி விஜய் மகன்; ஏன் தெரியுமா?
விஜய் நாயகனாக அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது மகன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியாகி க 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் #29YearsOfVIJAYSupremacy என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய், தந்தைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations Appa for completing 29 years and being such an inspiring presence to all. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay ❤️#ThalapathyVijay #29YrsOfVIJAYSupremacy pic.twitter.com/2bCNdQ8Ygu
— Sanjay Vijay (@IamJasonSanjay) December 4, 2021
அதில், 29 ஆண்டுகளை நிறைவு செய்து பலருக்கும் உத்வேகமாக இருந்து வரும் உங்களுக்கு வாழ்த்துகள் அப்பா. உங்களோடு நான் கழிக்கும் ஒவ்வொரு தருணமும் ஒரு கற்றல் செயல்முறை. வரும் ஆண்டுகளில் உங்களுக்கு இன்னும் அதிக வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்' என சஞ்சய் பதிவிட்டுள்ளார்.