எரிபொருள் நெருக்கடிக்கு இருநாட்களில் தீர்வு; புதிய அமைச்சர் வழங்கிய உறுதிமொழி
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்துடன் , தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் இருப்பு நிரப்பப்பட்டள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருளை பெற்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாளை (09) அல்லது நாளை மறுதினம் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால் எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.