அஞ்சலி செலுத்த சென்றோரை அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்த படையினர்!
நேற்றையதினம் தாயகமெங்கும் மாவீரர்நாள் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் - வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவோரை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்குஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன போது அங்கு வருவோரை படையினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
அதுமட்டுமல்லாது படையினர் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட போதும், அச்சுறுத்தல்களை மீறி அங்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகை சுடாினை மேஜா் சோதியா (சோதியா படையணி) அவா்களுடைய தாயாா் ஏற்றிவைத்தாா்.
தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஈகையோருக்கான ஈகை சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா் மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்து அழித்த இராணுவத்தினர் தற்போது அங்கு , 551ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.