யாழில் இராணுவத்தினர் வியாபாரம் செய்ய முற்றாக தடை
யாழில் இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்ய முற்றாக தடை செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் 10 வது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது.

இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம்
அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன், பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட வேண்டும் என ஒரு பிரேரணையை கொண்டு வந்தார்.
பிரேணைக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நான்கு பேர் உட்பட சபை அமர்வில் பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது .
இராணுவ உணவகங்களில் இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.