முன்னாள் இராணுவ வீரருக்கு நடந்த துயரம் ; அதீத வேகத்தால் விபரீதம்
கேகாலை - ஹேனகந்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெஹெல்வத்தை பகுதியிலிருந்து தந்தெனிய பகுதியை நோக்கிச் செல்லும் வீதியின் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகக் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுபாடு
உயிரிழந்தவர் 40 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபர் பலத்த காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.