இலங்கையில் அரசாங்க கட்டிடங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
அரசாங்க கட்டிடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Progress was reviewed on the ongoing project to fix Roof top solar panels on Govt buildings & religious institutes with the assistance of a USD 100 million credit line from the Indian Gov. 90% of the surveys have been completed on identified national schools, universities,… pic.twitter.com/WtG2c41HQQ
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 7, 2023
இந்த திட்டத்திற்காக இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் டொலர் கடன் உதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.