300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு
இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும், மின்சார விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் குறித்த திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இந்நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட சூரிய மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பயனாளர்கள் தேவையான கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.