ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?

Sri Lanka India Astrology Hinduism Solar Eclipse
By Sulokshi Aug 10, 2026 11:30 AM GMT
Report

பித்ருக்களின் ஆசி கிடைக்கும்   ஆடி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம்  இலங்கை, இந்திய இரவு  நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், இதனால் பெரிய தோஷங்கள் எதுவும் இல்லை என கூறப்படுள்ளது.

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம். 

ஆடி மாதத்தில் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் ஆடி அமாவாசை. வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளில் இந்த ஆண்டு சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது.

ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | Solar Eclipse On Aadi Amavasya 2026 Tharpanam

இதனால் வழக்கமான முன்னோர் வழிபாட்டினை செய்யலாமா? தர்ப்பணம் கொடுக்கலாமா? என பல சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளது.  

சூரிய கிரகணம் அன்று ஆடி அமாவாசை 

இந்து சமய ஆன்மீக வழிபாட்டில் சூரிய கிரகணம், அமாவாசை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கித்துவம் வாய்ந்த சக்தி வாய்ந்த நாட்களாகும். அதிலும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும் அம்பிகை வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த சமயத்தில் மந்திர ஜபம் தவிர மற்ற பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது என்பார்கள். இதனால் சூரிய கிரகணம் மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் இணைந்து வரும் நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா, கூடாதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | Solar Eclipse On Aadi Amavasya 2026 Tharpanam

வாழ்வில் வளம் தரும்  முன்னோர் வழிபாடு

ஒரு வருடத்தில் வரும் அமாவாசைகளில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகும்.

மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கடன் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், இந்த மூன்று அமாவாசைகளை தவற விடாமல் அவசியம் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டினை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | Solar Eclipse On Aadi Amavasya 2026 Tharpanam

ஆடி அமாவாசையில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், தன்னுடைய குடும்பத்தினர் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை நேரடியாக பூமிக்கு வந்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.

அதனால் ஆடி அமாவாசை, பித்ருதோஷம் உள்ளிட்ட மிக கடுமையான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.

 சூரிய கிரகணம் இரவு நேரத்திலேயே வருகிறது.  இதனால் கோவில் நடை அடைப்பு போன்றவை இந்த நாளில் இருக்காது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் வரும்.

இருந்தாலும் இரவு நேரத்தில் ஏற்படும் சூரிய கிரகணத்தால் தோஷம் ஏதும் ஏற்படாது. இதனால் வழக்கமான முறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடலாம்.

கிரகண நாளில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

தான தர்மங்கள்

இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், புதிய நதிகளில் நீராடுவது, காகத்திற்கு உணவு வைப்பது ஆகியவை பித்ரு தோஷங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு தான் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | Solar Eclipse On Aadi Amavasya 2026 Tharpanam

அதனால் வழக்கம் போல் ஆகஸ்ட் 12ம் தேதியன்று காலை சூரிய உதயத்திற்கு பிறகு நதிகள் அல்லது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். அதே போல் பகல் நேரத்தில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை செய்யலாம்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US