100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில் , 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும்.
100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
இது ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும். சூரியன், பூமி, நிலவு ஆகியவை சுற்றி வரும் போது அதன் இருப்பிடத்திற்கேற்ப சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வதுதான் சூரிய கிரகணம் ஆகும். இதனால் சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும்.
அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது அதிகாலை நிகழ்கிறது என்பதால் இதன் தாக்கம் தெரியாது.