பல நகரங்களில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் அரிய காட்சிகள்!
அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், அதாவது இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்துள்ளது. இது சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் தெளிவாகப் காண முடிந்தது.
சென்னை
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன.
அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
சென்னை
ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று அக்டோபா் 25-ம் திகதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
சண்டிகர்
சூரிய கிரகணமானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று மதியம் 2:28 -மணிக்கு தொடங்கி மாலை 6.31 மணி வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தின் முழு உச்சக்கட்டம் நான்கரை மணிக்கு ஏற்பட்டது.
இதை ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் தெரிந்தது.
யூரோப்
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, உஜ்ஜைன், வாரணாசி, பெங்களூரு மற்றும் மதுரா போன்ற இந்திய நகரங்களில் இந்த சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்தனர்.
பெங்களூர்
தமிழ் நாட்டில் சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும் போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்பட்டது. அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.