மரமுந்திரிகை விற்பனையால் இத்தனை கோடி லாபமா
மரமுந்திரிகை (கஜூ) விற்பனை மூலம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாரங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மரமுந்திரிகை விற்பனையில் அதிக வருமானம் கிடைத்தது. அந்த மாதத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
மரமுந்திரிகை விலை
கூட்டுத்தாபனத்தால் ஒரு கிலோ மரமுந்திரிகை ரூ.5700க்கும், தனியார் முந்திரிக் கடைகளில் முந்திரி கிலோ ரூ.9000க்கும் விற்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கடந்த ஆண்டு (2021) டிசம்பரில் மரமுந்திரிகை விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டது. அந்த மாதத்தில் ஒரு கோடியே நாற்பத்து எட்டு லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.