பைத்தியங்களில் இத்தனை நிறங்களா? சாடும் மனோகணேசன்
பைத்தியங்களின் கூடாரமாக, தன் தந்தை ஸ்தாபித்த ஸ்ரீலசுகட்சி ( SLFP) மாறி விட்டது என சந்திரிகா (CBK) திட்டுகிறார்.
ஆனால் யோசித்து பார்த்தால், முதல் இனவாத பைத்தியம், "சிங்களம் மட்டும்" சட்டத்தை கொண்டு வந்த இவரது தந்தை பண்டாரநாயக்க (SWRD) தான் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் மேளும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கு சமஸ்டி முறைமை
ஆனால், இவரேதான், சுதந்திரத்துக்கு முன் 1940களில் யாழ்ப்பாணத்துக்கு போய், இலங்கைக்கு சமஸ்டி முறைமை தேவை என்ற யோசனையை முன் வைத்தார்.
ஆனால் அன்றைய வடக்கின் தமிழ் தலைவர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே அவர்கள்தான், பண்டாவைவிட அல்லது பண்டாவுக்கு முந்தைய ஆதி பைத்தியங்கள் எனவும் மனோகணேசன் சாடியுள்ளார்.
நாமும், நமது எதிர்கால சந்ததிகளும் துன்புற வழி செய்துள்ள இந்த பைத்தியங்கள், வெறும் பைத்தியங்கள் இல்லை. பேராசை, சுயநலம், இனவாதம், பிரதேசவாதம், அடிப்படைவாதம் கொண்டிருந்த பைத்தியங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.