‘ஹெல்மட்’டுக்குள் ஹெரோயின் கடத்திய கில்லாடி இளைஞன்!
முன்புற இலக்கத்தகடு இன்றி வந்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் ஹெல்மட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மீடபட்டுள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 125 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது என கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயது இளைஞர் கைது
கொழும்பு, பாலத்துறை பாலத்துக்கு அருகில் வைத்தே 19 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுளளார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், சில மாதங்களுக்கு முன்னர் மினுவாங்கொட பகுதியல் இருந்து காணாமல்போன, மோட்டார் சைக்கிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதானவரை தடுப்பில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.