மொட்டு கட்சி ரணிலை கட்டுப்படுத்த முயற்சித்தால் அரசாங்கமே அழிந்துவிடும்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கூறுவதைச் செய்யும் நபர் அல்லர்.
ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன கட்டுப்படுத்த முயற்சித்தால், அது அரசாங்கத்தின் அழிவாக அமைந்து விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீளவே நாங்கள் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.
இரண்டு வருடங்களுக்கு அவர் பணியாற்ற தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாங்கள் கூறுவதை கேட்கமாட்டார்.
இருப்பினும், எங்க ளின் ஒத்துழைப்புடன் வேலை செய்கிறார். அவர் அனுபவமுள்ள அரசியல்வாதி. நாங்கள் அவரை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவர் முட்டாள் அல்லர்.
நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவரைக் கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும். – என்றார்.