மாத இறுதியில் சற்று குறைந்த தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கம் விலையானது தொடந்து ஏறிக்கொண்டே சென்ற நிலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத உட்ச்சத்தை தொட்டு சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.
வரலாறு காணாத உச்சம்
அந்தவகையில் இந்தியாவில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் திகதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை, சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.
இதற்கிடையே, நேற்று (பிப்.27ஆம் திகதி) தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மாத கடைசியான இன்று (பிப்.28ஆம் திகதி) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.7,960க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.52,400க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.105க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.