பெண்கள் குறித்து அவதூறு பேச்சு; கைதாவரா பயில்வான்?
பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்கள் செய்துவருகிறார். திரைசினிமா குறித்த செய்திகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அவர் அளவுக்கி மீறி அதிகம் பேசி வருவதாக கடும் விமர்சனக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சோனியா என்பவர் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் , பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்தும், உடல் உறுப்புகள் குறித்தும் ஆபாசமாக பேசி வருவதாகவும் உடனடியாக அவரை கைது செய்யவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.