அமைதிக்காக்கும் பணிகளுக்காக பயணமான இலங்கை விமானப்படை வீரர்கள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இன்று (21) காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அமைதிக்காக்கும் பணி
இந்த குழுவிற்கு கட்டளை அதிகாரியாக குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே செயற்படுகின்றார்.
அதில் இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உட்பட மொத்தம் 110 விமானப்படை உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமைதிக்காக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 10வது படைப்பிரிவைச் சேர்ந்த 94 விமானப்படை வீரர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
புறப்பட்டுச் சென்ற வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், நாடு திரும்பிய குழுவினரை வரவேற்கவும் விமானப்படை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேஷப்பிரிய சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.