ஒரே காருக்குள் துப்பாக்கியுடன் சிக்கிய ஆறு இளைஞர்கள் ; சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட்
கரந்தெனியவில் டி-56 ரக துப்பாக்கியை ஒத்த ஒரு போலித் துப்பாக்கியை வாகனத்தில் எடுத்துச் சென்ற ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கரந்தெனிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சோதனை
இந்த ஆறு சந்தேக நபர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டி-56 ரக துப்பாக்கியை ஏற்றிச் செல்லும் சிவப்பு நிற கார் ஒன்று உரகஸ்மான்ஹண்டியிலிருந்து கரண்தெனியவை நோக்கி வருவதாக கரந்தெனிய பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, கரந்தெனிய பொலிசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது பொலிஸ் அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும், சந்தேக நபரின் கார் தொடர்ந்து செலுத்தியுள்ளனர்.
பின்னர் பொலிஸார் அந்தக் காரை துரத்திச் சென்று நிறுத்தியுள்ளதுடன் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கரந்தெனிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.