டில்லியில் 6 மாடி மாணவர் விடுதி இடிந்து விபத்து; தீசிலமாகும் மீட்புப்பணி
இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஹோஸ்டல் டேஸ்' என்ற இந்த 75 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதி இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகள்
இதுவரை 06 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், 2 பேர் மீட்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சில மாணவர்கள் தங்கள் தொலைபேசிகள் வாயிலாக உள்ளிருந்து உதவி கேட்டு அழைப்பதாக உள்ளூர் பிஜேபி எம்.எல்.ஏ அனில் சர்மா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுமார் 50 மாணவர்கள் விடுதிக்குள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் பேரனர்த்த மீட்புப் படைகள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.