திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

வாக்குவாதம்
தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார்.
கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.