கொழும்பில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல்!
கொழும்பில் உள்ள வீடொன்றில், இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த் கொள்ளை சம்பவம் கொழும்பு – ரத்மலானை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்களை, கல்கிஸை பிரிவுக்கான குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் (08) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கைது சம்பவத்தில் ரத்மலானை, கல்கிஸை, மொரட்டுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26, 30, 21, 32, 35 மற்றும் 40 வயதுடைய ஆறு பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டுக்குள், நேற்று முன்தினம் (07) ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த குழுவினர், வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு வீட்டின் உடமைகளுக்கு சேதம் விளைவித்துவிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோயின், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கைக்குண்டு என்பவற்றையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.