இந்த ஆண்டில் இதுவரை 6 குண்டுத் தாக்குதல்கள்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலகக் குழுக்கள்
இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
யுத்த காலத்தில் பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தெஹிவளை சிரிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.