தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு அக்கா நடத்திய கொடூரம் ; வாக்குமூலத்தால் அதிர்ந்து போன பொலிஸார்
கடலூரில் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருமணமாகாத வாலிபரை கழுத்தறுத்து படுகொலை செய்த அக்கா பொலிஸாரிடம் சரணடந்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வாக்குமூலம்
கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் நபர் ஒருவர் தாயுடன் தனிமையில் வசித்து வந்த நிலையில் திருமணம் ஆகாத நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனி அறையில் இருந்த பிரசாத், கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் இருந்து வெளியே ஓடி வந்து தனது தாயாரிடம் துண்டு கேட்டு மயங்கி விழுந்தார்.
இதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது தாயார் அழுது கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, குறித்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை ஆரம்பமாகிய நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் பரபரப்பான வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த வாக்குமூலத்தில் உயிரிழந்த நபர் தன் தங்கைக்கு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனால் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்து உயிரிழந்த நபரின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரும் தலைமறைவாகி உள்ளதால், இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.