சைரன் சத்தத்தில் மத்திய கிழக்கு ; பல நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்க விதித்திருந்த காலக்கெடு இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , தாம் முன்வைத்த போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்காத பட்சத்தில், ஈரானின் “நாகரிகத்தையே அழித்து விடுவேன்” என கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த இறுதி எச்சரிக்கை இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் ஈரான் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதல் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான், பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்து அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் பலவும் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன,
பஹ்ரைன் – எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பு
கட்டார் – ஏவுகணைத் தாக்குதல் இடைமறிப்பு உறுதி
அமெரிக்கா – ட்ரோன் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல் எதிர்கொண்டதாக அறிவிப்பு
குவாய்ட்– நள்ளிரவு முதல் காலை வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் மேலும்,
துபாய் காவல்துறை, சைரன் ஒலி கேட்டவுடன் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் இந்த பதற்றமான சூழல், பெரிய அளவிலான மோதலாக மாறுமா என்ற அச்சத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.