இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை பாடுங்கள்; ஜனாதிபதி- பிரதமருக்கு சென்ற கடிதம்

president national anthem letter prime minister
By Krishna Jan 23, 2021 07:23 PM GMT
Report

இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் கூறுகையில் ,

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

நீலையில் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விட கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தை பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும்.

இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டு பிரஜைகள் . அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எனவே இந்த மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி பார்க்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்றத்ததை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையானது தமிழ் பேசும் சமூகத்தின் அனைவரது கோரிக்கையாக இருக்க வேண்டும் .

அதேபோன்று தமிழ் சமூகத்திலும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். பெப்ரவரி 4 ஆம் திகதி உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருக்கும் சுதந்திர நிகழ்வுகளில் தமிழிலேயே தேசியகீதத்தை பாடி எமது உரிமையை பாதுகாக்குமாறும் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US