Internet speed ஐ அதிகப்படுத்த உதவும் எளிமையான வழி
பொதுவாக, பலர் தங்களது வசதிக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் குறிப்பிட்ட Internet Plansகளில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள்.
இந்த Planனை பொறுத்தே ஒருவரின் மொத்த இணையப் பயன்பாடு மற்றும் இணையத்தின் வேகம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், அதிவேக Internet வசதியை தேர்வு செய்தும், பலர் Internet மெதுவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினையைப் போக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், பிரச்சினை தீரவில்லை.
நாம் வீட்டில் பயன்படுத்தும் Aluminum Foil இந்த பிரச்சினையை போக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், Aluminum Foilலை Router பக்கத்தில் வைப்பதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.
நாம் பொதுவாக பயன்படுத்தும் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய Aluminum Foil, வை-ஃபை சிக்னலைப் பிரதிபலிக்கவும், வேறு பக்கத்திற்கு திருப்பிவிடவும் உதவலாம்.
மேலும் இது, இணைய வேகத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக, Wi-Fi Routerக்குப் பின்புறத்தில், Aluminum Foilலை நிறுத்துவது, தற்காலிகமாக இணைய வேகத்தை மேம்படுத்துவதாக சொல்கிறார்கள்.
Routerரை சுவரின் மேற்புறமாக அல்லது உயர்ந்த இடத்தில் வைப்பதன் மூலமும், கண்ணாடி அல்லது சுவர்களுக்கு அருகாமையில் இருப்பதை தவிர்ப்பதன் மூலமும் Signalலை மேம்படுத்த முடியும்.
கூடுதலாக, மேம்பட்ட Coverageக்கு Wireless Repeater அல்லது extenderரையும் பயன்படுத்தலாம்.