சீரான இதயநலனை வெளிக்காட்டும் அறிகுறிகள்
உலகளவில் இறப்புகளை ஏற்படுத்தும் நோயில் இதயநோய் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இதய கோளாறுகளை கண்டறிய மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் வரும் ஒன்று அல்லது இரண்டு முறை பரிசோதனை செய்யலாம் என்றாலும் அவ்வபோது இதய பாதிப்பை எச்சரிக்கும் அறிகுறிகளை கண்டு அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
அதே போன்று இதய ஆரோக்கியத்தின் அறிகுறிகளும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதனால் அறிகுறிகளில் வித்தியாசம் உணர்ந்தால் மருத்துவரை உடனே சென்று பார்க்க இது உதவும்.
சீரான இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் 120/80 mm Hg என்னும் அளவில் இருந்தால் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
சிஸ்டாலிக் அழுத்தம் 130 அல்லது அதற்கு மேல் இருந்தால் டயஸ்டாலிக் அழுத்தம் 90 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது உயர்ந்ததாக கருதப்படுகிறது.
தொடர்ந்து உங்கள் இரத்த அழுத்தம் கண்காணிக்கும் போது அவை சீரான அளவில் இருந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு அளவுகள் என்பது அடிப்படை பரிசோதனையில் கண்டறியக்கூடிய ஒன்று.
கொழுப்பின் அளவு
கெட்ட கொழுப்பு குறைந்த (எல்டி எல்) அளவிலும் நல்ல கொழுப்பு (ஹெச்டிஎல்) நிறைவாகவும் இருக்க வேண்டும்.
இவை இரண்டும் சீராக இருந்தால் இதய நோய் அபாயம் குறைகின்றன.
உங்கள் பரிசோதனையில் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சீராக சரியாக இருந்தால் இதய ஆரோக்கியம் சீராக இருக்கிறது என்று சொல்லலாம்.
வாய் ஆரோக்கியம்
நல்ல வாய் ஆரோக்கியம் என்பது இதய ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
2021 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய ஆய்வு ஒன்றில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்தை கொண்டிருப்பதாக கண்டறிந்தனர்.
ஆரோக்கியமான ஈறுகள் உள்ளவர்கள் இரத்த அழுத்தமும் சீராக கொண்டிருந்தனர்.
ஆரோக்கியமான இதயத்துக்கு வாய்வழி சுகாதாரமும் முக்கியமானது.
தடையற்ற சுவாசம்
மார்பில் வலி, மார்பில் இறுக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவற்றை இல்லாமல் இருந்தால் உங்கள் சுவாசம் ஆரோக்கியமே.
சுறுசுறுப்பான நடைபயிற்சி, ஓடுதல், எடை தூக்குதல், தீவிர வேலை, அதிக உடல் செயல்பாடுகள் என எல்லா நிலையிலும் நீங்கள் கடினத்தை அசெளகரியத்தை உணரவில்லை என்றால் உங்கள் இதய அமைப்புக்கு வேண்டிய ஆக்ஸிஜன் சீராக கிடைக்கிறது.
இது இதயத்தின் ஆரோக்கியத்தை வெளிப்படுகிறது.
எப்போதேனும் தீவிர வேலையின் போது அசெளகரியம் உணர்ந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உற்சாகத்துடன் இருத்தல்
நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பது அதாவது ஆற்றலுடன் இருப்பது தெளிவான இதய ஆரோக்கிய அறிகுறியாகும்.
ஆரோக்கியமான இதயம் உங்கள் தசைகள் மற்றும் உறுப்புகள் உட்பட உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான இரத்த ஒட்டத்தை தடையின்றி அளிக்கிறது.
இதனால் உடல் ஆற்றலுடன் இயங்க வேண்டிய சக்தி உடல் உறுப்புகளுக்கு கிடைக்கிறது.
எப்போதும் உற்சாகமாக மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லலாம்.
நிலையான இதயத்துடிப்பு
இதயம் படப்படப்பு என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். பெரியவர்கள் ஓய்வாக இருக்கும் போது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 60 முதல் 100 க்குள் இருக்க வேண்டும்.
உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இரத்த ஓட்டம் இருந்தாலே இதயத்துடிப்பு சீராக இருக்கும்.
இதயத்துடிப்பு சீராக இருக்கும் போது இதய ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
உடல் செயல்பாடு, கடினமான வேலையின் போது உடலில் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம்.
அதே நேரம் மன அழுத்தம், கவலை போன்றவையும் இதயத்துடிப்பை பாதிக்கலாம் என்பது குறிப்பிடட்தக்கது.
மார்பு வலி இன்மை
மார்புவலி இல்லை என்றால் இதயம் ஆரோக்கியமாக மார்பு வலி அல்லது மார்பில் ஏதேனும் அசெளகரியம் என்று எதையும் நீங்கள் உணரவில்லை என்றால் இதயம் நன்றாக வேலை செய்வதற்கான சமிக்ஞையாக எடுத்துகொள்ளலாம்.
அதே நேரம் மார்பு பகுதியில் ஏதேனும் தொடர்ச்சியான அசெளகரியம் உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்.