வெளிநாடுகளுடன் நள்ளிரவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நல்லது; நாமல் ராஜபக்ச
அரசாங்கம் 24 மணி நேரமும் வேலை செய்ய முடியும் என்றால், நள்லிரவு 12 மணிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நல்லது என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கள் மேற்கொள்ளும் போது அந்த நாடுகளின் நேரத்துக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அமெரிக்காவின் நேரம் பகல் 1 மணி என்றால் நம் நாட்டின் நேரம் இரவு 12 மணி என நாமல் தெரிவித்துள்ளார்.
யுகதனவ் மின் ஆலையின் பொதுச்சொத்தின் நூற்றுக்கு 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
மேலும் இரவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தால், அது இரு தரப்பினருக்கும் வசதியான நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.