சேதத்திற்குள்ளாகும் சீகிரிய சுவர்கள்!
இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சீகிரியா பழைமையான சுவர்களில் 70 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் படிகளால் அமைக்கப்பட்ட பாதையின் ஊடாக செல்வதால் அவை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்
இது தொடர்பான அறிவுறுத்தல் பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பல சுற்றுலாப் பயணிகள் அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள புராதன செங்கல் சுவர்களை புனரமைப்புச் செய்வதற்காக வருடாந்தம் மில்லியன் கணக்கான ரூபா செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.