அமெரிக்க தூதரகம் முற்றுகை; பிணைக்கைதிகளாக்கப்பட்ட ஊழியரகள்!
ஏமன் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் ஒன்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன் ஊழியர்களை பிணைக் கைதிகளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
அதோடு அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் முக்கிய கருவிகளை கைப்பற்றியுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகளுடன் செயல்பட்ட உள்ளூர் ஊழியர்கள் மூவரையும் சிறைப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, இதற்கு முன்னர் 22 பாதுகாப்பு ஊழியர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். எனினும் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட குறித்த அமெரிக்க தூதரகமானது செயல்படாமல் இருந்ததாகவே கூறப்படுகிறது.
அமெரிக்கர்களுக்காக பணிபுரிந்த மூன்று ஏமன் நாட்டவர்கள் சானாவில் உள்ள ஒரு தனியார் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் நடந்துள்ளது.
அதேவேளை , தூதரக வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 22 ஏமன் நாட்டவர்களும் தொடர்ச்சியாக சமீப வாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த திடீர் ஆக்கிரமிப்பு சம்பவம் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு ஈரான் நாடு ஆதரவளித்து வருவதாக சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதேவேளை நவம்பர் 5ம் திகதி சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று உள்ளூர் ஊழியர்களில் ஒருவர் தூதரகத்தின் பொருளாதார அதிகாரி ஜமீல் இஸ்மாயில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.