கிளிநொச்சி காட்டில் சுற்றிவளைப்பு; மீட்கப்பட்ட அபாயகரமான பொருட்கள்
கிளிநொச்சி - பிரமந்தனாறு மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் அபாயகரமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவளுக்கமைய அவை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 200 துப்பாக்கி ரவைகளும் மற்றும் 25 மூட்டைகளில் கட்டப்பட்ட பாவித்த ரவை வேற்றுக்கூடுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கைதான சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


